செய்திகள்

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அன்னதானங் கொடுங்கள்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயப் பரிபாலனசபையின் ஒழுங்குபடுத்தலில் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் உதவும்முகமாக அன்னதான சபைஒன்றினை நிறுவி அதன்மூலமாக அன்னதானம் வழங்கி வருகின்றார்கள். இவ்வன்னதானக் கொடுப்பனவானது வாரத்தின் ஒவ்வோர் திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ஆலய அன்னதான மடத்தில் இடம்பெறுகின்றது.

புலம்பெயர் கண்ணகி அடியார்களும், உறவுகளுமாகிய நீங்கள் உங்களது உரித்துக்காரர்களது 31ம் மறைவுநாள், அல்லது ஆட்டத்திவசநாள், அல்லது உங்கள் குடும்பத்தவரது பிறந்தநாள், திருமணநாள் அல்லது உங்கள் உரித்தாளர்களது விசேடநாட்களைக் கருத்திற் கொண்டு மேற்படி இருநாட்களில் அன்னதானம் வழங்க முன்வரலாம்.

வற்றாப்பளையிலே வீற்றிருக்கும் அம்மன் ஆலயத்தில் அன்னதானம் கொடுக்க என்ன செய்ய வேண்டும்?

1. நீங்கள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய அன்னதான சபையினை நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்து உங்கள் விருப்பப்படி ஒழுங்குகளை மேற்கொள்ளலாம்.

ஆழைப்பதற்கான தொலைபேசி இலக்கம்: +094-24 324 3558


மின்னஞ்சல் : vatkannaki@gmail.com
: info@vattappalaikannaki.com

2. கனடாக் கண்ணகியம்மன் பரிபாலனசபையினரின் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஒழுங்குகளை மேற்கொள்ளலாம்.

அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்: சந்திரன்: 416-302-9022, இராசேஸ்வரன்: 416-285-8227.

ஒருமுறை அன்னதானம் வழங்குவதற்கு 200 டொலர்கள் போதுமானதாகும்.

நீங்கள் அன்னதானம் கொடுக்க முன்வரும்போது அன்னதானம் யாருக்காகக் கொடுக்கப்படுகின்றதோ அவரது முழுப்பெயர், நட்சத்திரம் என்பன தரப்படுதல் வேண்டும். அம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதன் பின்னர் தங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கொடுத்த பணத்திற்கான பற்றுச்சீட்டு, அன்னதானம் நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பன தங்கள் பார்வைக்காக அனுப்பிவைக்கப்படும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

பரிபாலனசபை – கனடா
சந்திரமௌலீஸ்வரர் சிவாலயம்
ஸ்காபுரோ, கனடா.

 
 
 
     
       

Copyright © 2010 Vattrapalai Kovil. All Rights Reserved.