வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புனர்நிர்மானப் பணிகளுக்கு உதவிகள் கோரப்படுகின்றன

ஈழத்திருநாட்டின் வரலாற்றுப் பெருமை மிக்கதும் கடல் நீரில் விளக்கேற்றிப் பொங்கல் விழாக்கமணும் புதுமை மிக்க வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைக் கிராமத்தின் நந்திக்கடலோரத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டில் நடைபெற்று முடிவடைந்த யுத்தத்தின் தாக்கம் அதிகளவில் எமது பிரதேசத்தையே பாதித்தது. இந்திய அமைதிப்படை முல்லைத்தீவுக்கு வருகை தந்த முதல் நாளான 02.11.1987 அன்று செலுத்திய முதல் எறிகணை இவ்வாலையத்தை குறிவைத்தே வீசப்பட்டது. தோடர்ந்து 16.05.2009 யுத்தம் முடிலரையும் வரை அனேக தடவைகள் பல்வகைத் தாக்குதல்களுக்கும் ஆலயமும் சூழலும் இலக்காகின.

இந்நிலமையினால் ஆலய மூலஸ்தானத்தின் சுவர் வெடிப்புக்குள்ளாயிருந்தது. இதனால் சமாதான காலம் கிட்டியதும் கருவறை, அர்த்தமண்டபம் ,மகாமண்டபம் ஆகிய மூன்றினையும் கருங் கல்லினால் அமைப்பதென ஆலய பரிபாலன சபை முடிவெடுத்ததற்கமைய அப்பணி ஆரம்பிக்கபட்டு தற்போது முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது.
ஸதபதியாரதும் ,பொறியியலாளரதும் ஆலோசனையின்படி தரையின் மட்டம் இரண்டடிகள் உயர்த்தவேண்டி ஏற்பட்டது புதிதாக அமைக்கவேண்டிய தேவையும் காலத்தின் தேவை கருதியும் இம்மாற்றங்கள் செய்யவேண்டியேற்பட்டது. இதற்கமைய அனைத்தப்பணிகளும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளுக்குரிய உத்தேச செலவு மதிப்பீடு இலங்கை நாணயத்தில் ரூபா பதினெட்டுக் கோடி என கணிக்கப்பட்டுள்ளது (ரூபா. 180000000). இத்தொகையினை உடனடியாக ஆலயத்திலிருந்து பெறமுடியாதுள்ளதனால் உள் நாட்டிலும் வெளி நாட்டடிலுமுள்ள பக்தர்கள் ,நலன் விரும்பிகளிடமிருந்து உதவி கோருவதென தீர்மானிக்கப்பட்டடுள்ளது.
வரலாற்று முக்கியம் வாய்ந்த இப்பணியில் தங்கள் குடும்பமும் பங்குகொண்டு இயன்ற நிதியுதவி வழங்கியுதவுமாறு வினயமாக வேண்டுகின்றோம்.

தயவுடன் கவனிக்கவேண்டியவை:-
1) ஆலயத்தின் பற்றுறுதிச் சீட்டின்றியோ அறிமுகமற்றவரிடமோ நிதி செலுத்தவேண்டாம்.
2) ஆல வங்கிக் கணக்கி கணக்கிலக்கங்கள் தரப்படுகின்றன.
3) வங்கிகள் மூலம் பணம் செலுத்துபவர்களது பெயர் முகவரி தொலைபேசி எண் என்பவற்றை எமக்குத்தெரியப்படுத்துங்கள்.ஆலயத்திலிருந்து பணம் கிடைத்தமைக்கான உறுதிச்சீட்டும் ஆலய பிரசாதமும் அனுப்பிவைக்கப்படும்.

மு.குகதாசன்
தலைவர்.
ஆலயபரிபாலன சபை
077 089 1776
இ.சபேசன்
பொருளாளர்
ஆலயபரிபாலன சபை
077 739 4140
சு.கிருஸ்ணமூர்த்தி
செயலாளர்
ஆலயபரிபாலன சபை
077 672 5943

கணக்கின் பெயர்: VATTAPALAI KANNAKY AMMAN TEMPLE BOARD OF TRUSTEE
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பரிபாலன சபை.

கணக்கு இலக்கம்: 0960-35380510-001

Swift Code     : SEYBLKLX

சேலான் வங்கி முல்லைத்தீவு கிளை.
P.W.D வீதி. முல்லைத்தீவு.


 
 
 
     
       

Copyright © 2010 Vattrapalai Kovil. All Rights Reserved.